வெள்ளி, 14 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1319


 திருக்குறள் -சிறப்புரை :1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. ---- ௩க ௯

அவள் ஏனோ புலந்து நின்றாள், அவள் ஊடலைத் தணிக்க, பணிந்து நின்று உண்மையை உரைத்தாலும் சினம்கொண்டு, நீர், உமக்கு உறவுடைய பிற மகளிரையும் இப்படித்தான் பணிந்து ஊடல் தணிக்கின்றீரோ, என்று புலந்து கொண்டாள்.

தெரிமலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொருமுரண் சீறச் சிதைந்து நெருநையின்
இன்று நன்று என்னை அணி
அணைமென் தோளாய் செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கெவன்
ஐயத்தால் என்னைக் கதியாதி தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு.” -----கலித்தொகை.

நெருங்கக்கட்டிய பல நறிய மலர்களால் செய்த  மாலையும் நீ, விரும்பின பரத்தையர், ஊடி முரணிச் சீறச் சிதைந்து நிறங்கெட்டு, என் தலைவனுடைய ஒப்பனை நேற்றைக்காட்டிலும் இன்று நன்றாக இருந்தது என்றாள்.
அதுகேட்ட தலைவன், அணைபோன்ற மெல்லிய தோளாய், இவன் நீங்கி வந்தால் பரத்தையரிடத்து அல்லது நீங்கான் என மனத்துள் கொண்டு, ஐயத்தாலே யான் செய்யாத செயல்களைச் சொல்லி இவ்விடத்தே  என்மேல் சினம் கொள்வது எதனால்? நான் தீதற்றவன் என்பதைத் தெய்வத்தின் சான்றாகத் தெளிவிப்பேன் ; அதனைக் காண்பாயாக ; இனி என்னைச் சினவாதே, என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக