வியாழன், 13 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1318


திருக்குறள் -சிறப்புரை :1318        

தும்மச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. ------- ௩கஅ

எதற்கெடுத்தாலும் பிணங்குகிறாளே என்று அஞ்சி, அரும்பிய தும்மலை அடக்கினேன் ; நும் காதலியர் உம்மை நினைப்பதை மறைக்கவே தும்மலை அடக்கினீரோ என்று புலந்து அழுதாள்.

அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
கமழ் கோதை கோலாப் புடைத்துத் தன் மார்பில்
இழையினைக் கையாத்து இறுகுஇறுக்கி வாங்கி
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்.” ----பரிபாடல்.

அமிழ்தம் போன்ற இனிமை நிறைந்த பார்வையாலே யாரோ ஒருத்தி, தன் கணவனைக் கூர்ந்து பார்த்தாள் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தனது மார்பில் கிடந்த மணம் வீசும் மாலையை எடுத்து, அம்மாலையைக் கோலாகக் கொண்டு தன் கணவனை அடித்தாள், தன் மார்பில் கிடந்த அழகிய அணிகலனாகிய வட்த்தைக் கழற்றி,, அவனது முன்கைகளைச் சேர்த்துக்கட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஏடா..! நீ குற்றம் உடையவன் என்று கூறினாள். அவனோ, அவளை வணங்கி நான் செய்த குற்றம் யாது எனக் கேட்டான்.  இக்காட்சியைக் கண்ட பலரும் குற்றமற்ற , தூயவனைக் காணுங்கள் என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக