ஞாயிறு, 9 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1309


திருக்குறள் -சிறப்புரை :1309

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. ------0

குளிர்ச்சியைத் தருகின்ற நீரும் நிழல் உள்ள இடத்திலிருந்து கிடைக்குமானால் அஃது இனிமையைத்தரும் ; அதுபோல, புலவியும் அன்புடையாரிடத்து நிகழுமானால் அஃது இனிமையைத்தரும்.

பேயும் அறியா மறையமை புணர்ச்சி
பூசல் துடியில் புணர்பு பிரிந்திசைப்பக்
கரந்த சுரப்பொடு நாம் செலற்கு அருமையின்
கடும்புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைந்தோளே….” ---அகநானூறு.

 நெஞ்சே…! பேயும் அறியாத காலத்தே நிகழ்ந்துவந்த  களவுப் புணர்ச்சியை, ஆரவாரமுடைய துயினைப் போல ஒருகால் இணைந்தும் ஒருகால் தனித்தும் அயலோர் அலர் கூறலால் முன்புபோல் சுரந்த ஒழுக்கத்தில் இனி நாம் செல்லுதற்கு அருமை எய்தினமையால் போலும், விரைந்தோடும் நீர் மிக்க காவிரி எனும் பேர் யாற்றில்,நெடிது சுழலும் சுழிகளை உடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல, நெற்று உள்ளம் நடுங்கும் துன்பம் போகத் தழுவி, ஆகத்தில் பொருந்திக் கிடந்தனள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக