திருக்குறள்
-சிறப்புரை
:1325
தவறில
ராயினும்
தாம்வீழ்வார்
மென்
தோள்
அகறலி
னாங்கொன்று
உடைத்து. ---- க ௩உ ௫
தம்மிடம் தவறில்லை என்றாலும், தம்மால் விரும்பப்பட்ட காதலியின் தோள்களை ஊடலால்
பிரிந்திருப்பதிலும் ஓர் இன்பம் உண்டாகும்.
”கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறிஅருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே..”---குறுந்தொகை.
அடுக்காக உள்ள மலைகளை உடைய அவ்விடத்தில் மிளகுக்
கொடியில் வளர்ந்துள்ள தளிர்களை அருந்தக் குரங்குகள் ஒருங்கு கூடித் தங்கியுள்ள பெரிய
மலைநாட்டின் தலைவன், புணர்ந்துழியும் பிரிந்துழியும்
ஒத்த இனிமையுடையவன். ஆதலால், எம்மோடு ஒப்புமையுடைய
துன்பத்திலும் துன்பம் இல்லாது, இன்பத்தில் மட்டும் ஒப்பதாய்
இனிதாக விளங்கும் துறக்க உலகம் இனிதாகுமோ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக