திருக்குறள்
-சிறப்புரை
:1308
நோதல்
எவன்மற்று
நொந்தாரென்று
அஃதறியும்
காதலர்
இல்லா
வழி. ---- க ௩0 ௮
இவர் நமக்காக வருந்தினார் என்று அறிந்து, தாம் வருந்தும் காதலர் இல்லாதவிடத்து,
நாம் வருத்தப்படுவதால் என்ன பயன் கிடைக்கப்போகிறது..?
“ சென்ற காதலர் வந்தினிது முயங்கிப்
பிரியாது ஒருவழி உறையினும் பெரிதழிந்து
உயங்கினை மடந்தை என்றி தோழி
அற்றும் ஆகுமஃது அறியாதோர்க்கே
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பிலங்கடையே.” ----நற்றிணை.
தோழி…!
அரிய நெறியில் பிரிந்துசென்ற காதலர், மீண்டுவந்து
இனிதாக நின்னை முயங்கி நீங்காது நீங்கள் இருவரும் ஓரிடத்தே வாழும் பொழுது, நீ பெரிதும் நெஞ்சழிந்து ‘மடந்தையே ஏன் வருந்துகின்றனை’ என்று கூறினை; அவ்வுண்மையை அறியாதவர்க்கு அத்தன்மையாகவேதான் காணப்படும்; நம் காதலன் முன்பு பிற மாதரை விரும்பாத கொள்கை உடையவனாயிருந்து, இப்பொழுது தன்னை விரும்பிய பரத்தையிடத்துத் தன் வளப்பம் பொருந்திய மார்பை மடுப்பானாயினான்;
இங்ஙனம் பிறள் ஒடுத்திபால் அன்பு வைத்தால் என்னிடத்தில் அவனுக்கு எவ்வாறு அன்பு தோன்றும்..?
அன்பு என்பது இல்லாதவழி என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் யான் அவனைத் தழுவிக்கொள்வதனாலும்
யாது பயன் விளையும்..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக