திருக்குறள்
-சிறப்புரை
:1294
இனிஅன்ன
நின்னொடு
சூழ்வார்யார்
நெஞ்சே
துனிசெய்து
துவ்வாய்க்காண்
மற்று.----- க ௨ ௯ ௪
நெஞ்சே..!
நீ அவரைக் கண்டதும் பிணங்கிப் பின்னர்க் கூடவும் துணிய மாட்டாய், இனி என் நோய் தீர உன்னோடு கலந்து பேசப்போகின்றவர்
யார்..?
“வருவதுகொல்லோ தானே வாராது
அவண் உறை மேவலின் அமைவது
கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல்வரும்
மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துற
பந்து ஆடு மகளிரின் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்ற
என் நெஞ்சே.”-----ஐங்குறுநூறு.
வேடர்கள் காட்டில் கொளுத்திய
கொள்ளியைக் கண்டு அஞ்சித் தம் கூடுகளுக்குச் செல்லும் மயில்கள், கதிர்கள் கொய்யப்பெற்ற
அரிதாளில் தங்கியிருந்த குருவிகள் எழுவதும் விழுவதுமாய் வருந்திட்த் தம் சிறகை விரித்துப்
பந்தாடு மகளிர்போல, அசைந்து ஆடிச் செல்லுதற்கு
இடமான மலைகள் சூழ்ந்த நாடனொடு சென்றுவிட்ட என் உள்ளம் மீண்டும் என்னிடம் வருமா, அன்றி வாராது அவன் வாழும்
இடத்திலேயே தானும் தங்கியிருத்தலை விரும்பி, அவ்விடத்திலேயே தங்கிவிடுமா என்பதறியேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக