திங்கள், 3 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1298


திருக்குறள் -சிறப்புரை :1298

எள்ளின் இளிவாமென்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. ------ ௨ ௯ ௮

 உயிரொடு ஒன்றிய காதலைக் கொண்ட என் நெஞ்சம்,  காதலரை இகழ்ந்துரைத்தல் இழிவாம் என்று கருதி , அன்புசெய்த அவருடைய  பண்பு நலன்களை மட்டுமே என்ணி இருக்கும். 

மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையின் கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன் மன் எம் தோளே
இன்றும் முல்லை முகை நாறும்மே.”-----குறுந்தொகை.

கள் பெய்த நீல மணியையைப் போன்ற  நிறமுடைய கலத்தைப்போல, சிறிய வாய்ப்பகுதியை உடைய சுனையின்கண் உளவாகிய பிளந்த வாயினை உடைய தேரைகள், கரடிகை எனும் பறையைப்போல ஒலிக்கும். இத்தகைய நாட்டின் தலைவன், களவுக்காலத்தில், சென்ற திங்களில், நீண்டபொழுது விளங்கும் முழுநிலா நாளில் என்னுடைய நெடிய தோள்களைத் தழுவினான். அதனால், இன்றும் அவன் சூடி வந்த முல்லையின் மணத்தை என்  தோள்கள் வீசுமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக