செவ்வாய், 4 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1300


திருக்குறள் -சிறப்புரை :1300

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. ----00

நமக்குத் துன்பம் வந்தபோது , நம்மைத் தேற்ற வேண்டிய நெஞ்சமே, நமக்குத் துணையில்லாத போது, நம்முடைய உறவினர்
அல்லாத பிறர் எல்லாரும் கண்டும் காணாமல் அயலராகவே இருப்பர்.

யானும் நின்னகத்து அனையேன் ஆனாது
கொலைவெங் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மடமான் போல
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே.” ---கலித்தொகை.

யான் நினக்குப் பயன்படாத தன்மையள் ஆகிவிட்டேன் ; கொலைத் தொழிலில் கூடிய கோட்பாட்டினைக் கொண்ட நாய், வேட்டைக்குச் சென்று தனக்கு என்று அகப்படுத்திக்கொள்ள, அதற்குக் கிடைக்காது, வேடனுக்குக் கிடைத்த மடமான் போல, எனக்கு உடையதென்று யான் அகப்படுத்தவும், என்னிடத்து வாராமல் நின்னிடத்து வரும் என் நெஞ்சினைப் பாதுகாத்துக் கொள்வாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக