சனி, 8 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1307


திருக்குறள் -சிறப்புரை :1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று. ----0

புணர்ந்து மகிழ்தல் , நெடுநாள் நீடிக்குமோ நீடியாதோ என்று எண்ணுவதால் ஊடல் கொள்வதிலும் ஒருவகையான துன்பம் இருக்கின்றது.

ஓர் ஊர்வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழுய மன்னே நாண் அட்டு
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண்படவே.” -----குறுந்தொகை.

 தோழி…..! நம்மிடத்து அயன்மையை உடைய தலைவர், தம் சேரியுள்ள ஒரே ஊரில் பரத்தையுடன் வாழ்ந்த போதிலும், தம் சேரிக்கண் வருவதில்லை. ஒருகால், உணவு உண்பதற்கு தம் சேரிக்கு வந்தபோதிலும் நம்மைத் தழுவுதலும் இல்லை. சுடலையை ஒருவன் காணாமல் கடப்பதுபோல, என்னைக் கண்ணெடுத்தும் பாராமல் செல்வர். என்னுடன் பிறந்த நாணத்தைக் கொன்று, தன்னிடம் உள்ள அறிவை இழத்தற்குக் காரணமாகிய காமம், வில்லினின்றும் வழுவிப் போய்க் குறியல்லாத இடத்தில் வீழ்ந்த அம்பினைப் போல், எங்கோ சேமையில் சென்று அகப்பட்டுக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக