செவ்வாய், 11 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1313


திருக்குறள் -சிறப்புரை :1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.----- ௩க௩

மரத்தில் மலரும் பூக்களைச் சூட்டிக்கொண்டாலும், நும் காதலி ஒருத்திக்குக் காட்டவேண்டியே சூடினீர் என்று சினம் கொள்வாள்.

இஃது ஒத்தன் புள்ளிக்களவன் புனல்சேர் பொதுக்கம் போல
வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும்
ஒள் இதழ் சோர்ந்த நின்கண்ணியும் நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்
தவறாதல் சாலாவோ கூறு.” –கலித்தொகை.

  இவன் ஒருத்தன் என் நெஞ்சொடு வியந்து கூறி, புள்ளியுடைய நண்டுகள் நடக்கத் தடங்கள் நீர்க்கரையிலே தோன்றுவனபோலப், பெரிய நகங்கள் கீறிய வடுக்களும் ஒளியுடைய பற்கள் பதிந்த குறிகளும் ஒள்ளிய பூவிதழ்கள் உதிர்ந்த  நின் மாலையும் பரத்தையர் நின்னோடு வேறாகிச் சினந்து அடிக்கச் சிவந்த நின்னுடைய மார்பும் தவறாக இருப்பது போதாதோ.. வேறு என்னதான் தவறு காண வேண்டும் ..? என்றாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக