மெய்ப்பொருள்
காண்பது அறிவு -10
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைவன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்று
உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாது
போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திருந் தானே.”
–திருமந்திரம்.
ஐம்பொறிகளுக்குத்
தலைவன் – ஆருயிர்
ஐவர்
வாழும் ஊர் – ஐம்பொறிகள் ; உடல்
அவ்வூர்க்குத்
தலைவன் – மனம்
குதிரை
– உயிர்ப்பு (உயிர் வளி)
அகத்
தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும்; முறையான
பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது, துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித்
தான் வேண்டியவாறு சென்றுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக