திருக்குறள் -சிறப்புரை :927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். --- ௯௨௭
(உள் ஒற்றி ; கள் ஒற்றி)
கள்ளினை மறைத்து, மறைந்து குடித்துக் கண் சாய்ந்து தளர்பவரை உள்ளூரில்
வாழ்பவர் அவர்தம் நிலையறிந்து எப்பொழுதும் ஏளனமாக இகழ்வர்.
“கள் உண்பான் கருமப் பொருள்
இன்னா.” இன்னாநாற்பது.
கள் உண்பான் சொல்லுகின்ற செயல்களின் பயன் துன்பம் தருவதாகும்.
நன்று.
பதிலளிநீக்கு