மெய்ப்பொருள் காண்பது அறிவு -22
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” ---திருமந்திரம்.
காற்றைப்
பிடிக்கும் கணக்கை அறிந்துகொண்டால் எமனையே எட்டி உதக்கலாம்.
காற்றை
இடப்புற மூக்கின் வழியாக உள்ளுக்குள் இழுத்து, உள்ளே அடக்கி வைத்திருந்து பின்னர் வலப்புற
மூக்கின் வழியாக வெளியிட வேண்டும். ஓம் –
கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவின் கீழுள்ளது மூலாதாரம் , அந்த மூலாதாரத்தைத்
தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய “ஓம்.” ( வல்லுநர்
வழிநின்று செய்முறை அறிக.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக