திருக்குறள் -சிறப்புரை :924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. --- ௯௨௪
கள் உண்ணல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்யும் குடிகாரன்முன், நாணம்
என்னும் நற்குணம் நிறைந்த பெண், அவ்விடத்தே நிற்க வெட்கப்பட்டு விலகிப் போவாள்.
“ பொய்யான் புலாலொடு கள்
போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனம்
சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால்;
என்றும்
அயல அயலவர் நூல். –
ஏலாதி.
பொய் கூறான் புலால் உண்ணான், கள் குடியான், தீமைகள் செய்யான், சிற்றினம்
சேரான், பிறரை இகழ்ந்து பேசான் இத்தகைய அருங்குணங்கள் வாய்க்கப்பெற்ற ஒருவனுக்கு உற்று
நோக்குங்கால் அறிவுநூல்கள் வேண்டுவனவல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக