திருக்குறள் -சிறப்புரை
:948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.--- ௯௪௮
உணவுமுறையான் உடலைப் பேணாது ஒழியின் நோயில் நலிதல் உண்டாம். நோய் நீக்கும் மருத்துவர்,நோயின் தன்மை அறிந்து,
நோயின் வேர் இதுவெனக் கண்டறிந்து, அந்நோயைத்
தணிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து உடலுக்குப் பொருந்துமாறு மருந்தைத் தேர்ந்து செயல்பட வேண்டும்.
”அரும்பிணி உறுநர்க்கு வேட்டது
கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த
அறவோன் போல..” ---நற்றிணை.
கொடிய நோய் உற்றவர்க்கு அவர் விரும்பியதைக் கொடுக்காது, தகுந்த மருந்தை
ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவன்போல.
“குடலேத்தம் தெரியாம கோடி
வைத்தியம் பண்ணினானாம்” என்றொரு பழமொழியும் வழக்கில் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக