மெய்ப்பொருள் காண்பது அறிவு -21
”முகத்தின்
கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின்
கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்
தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச்
சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனம்.” –திருமந்திரம்.
உங்கள் கண் பார்வையை, புருவத்தின் நடுவில்
வைத்திருங்கள் ; கேசரி முத்திரை என்று இதனைக் குறிப்பிடுவர். வெளியெலாம் அடங்கியிருக்கும்
புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது
- தியானம்.
அகக்
கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. முகக் கண்கொண்டு பார்ப்பது மூடத்தனம். அகக்
கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்பதே திருமந்திரத்தின் கருத்தாகும்.
திருமந்திரம் கூறும் இக்கருத்தினை அனுபவத்தில் நான் உணர்ந்துள்ளேன். உண்மையில் சொல்லப்போனால் அகக்கண்ணால் காணும், பெறும் இன்பத்தை விவரிப்பது சிரமமே.
பதிலளிநீக்கு