மெய்ப்பொருள்
காண்பது அறிவு -12
அன்பு
செய்வாரை அறிவான் சிவன்….!
”துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாந்
துணையது வாய்வருந் தூயநற் கந்தந்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.”
---திருமந்திரம்.
இயற்கை,
உண்மை, அறிவின்ப உருவாகிய சிவபெருமான், எந்நிலையினும் எவர்க்கும் எல்லாவாற்றானும் விளக்கத்துணை
நிற்கும் பேரொளிப் பிழம்பாவான். அவன் சிவகுருவாய்வந்து திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்துவான்.
அம்மந்திரத்தினையே ஆகுபெயராக ஈண்டுச் சொல்லென ஓதினார். அதற்குத் துணையாக இருப்பவனும்
அவனே. அவன் மலர் மணம்போல் ஆருயிர்களைத் தன் திருவடிக்கண் அடக்கி இன்புறுத்தலின் தூயநற்
கந்தந் துணையென்றனர்.இத்தனையும் நிகழ்வதற்கு வாயிலாகிய கல்வித் துணையாக எழுந்தருள்பவனும் அவனே. அதனால் அச்சிவனைத்
’தூய நற் கல்வி’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக