திருக்குறள் -சிறப்புரை :928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். – ௯௨௮
இதுவரை கள்ளினைக் குடித்துக் களிப்பறியேன் என்று கூறுவதைக் கைவிடுக ;
கள் குடித்தால், அறிவு மயங்கிய நிலையில் செஞ்சத்தில் ஒளித்து வைத்திருந்த செய்திகள்
யாவும் தானே வெளிப்படும்.
(மதி அழிய மானமும் அழிய நேரிடும்.)
”புலை மயக்கம் வேண்டிப் பொருட் பெண்டிர் தோய்தல்
கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல்
சொலை முனிந்து
பொய் மயக்கம் சூதின்கண் தங்குதல் இம்மூன்றும்
நன்மை இலாளர் தொழில்.– திரிகடுகம்.
இழிகாம இன்பம் வேண்டிப் பொருள் பறிக்கும் வேசியரோடு உறவாடல் ; பிறர் உண்ட எச்சில் கலத்தில் கள் உண்ணல் ; அறிவுடையார்
கூறும் உண்மைகளை வெறுத்துப் பொய் கலந்த சூதாட்டத்தில்
ஈடுபடல் ஆகிய இம்மூன்றும் அறிவற்றவர்களின் செயல்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக