மெய்ப்பொருள் காண்பது அறிவு -14
தத்துவங்கள்
-25
தத்துவம் : இயல்பு, உண்மை, நிலைமை, தன்மை
எனப் பொருள்படும்.
ஐஅஞ்சாகிய
தத்துவம் மேல் நின்ற நினக்கு –இறைவன்.
”நிலம்
நீர் தீ வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகமாதலின்.” –தொல்காப்பியம்.
நிலம், நீர், தீ,காற்று, ஆகாயம் – பூதங்கள்
-5
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் –புலன்கள்
-5
மெய், வாய், கண், மூக்கு, செவி – பொறிகள்
– 5
கை, கால், வாக்கு, குதம், குறி – கருவிகள்
– 5
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் –
கரணங்கள் -4
ஆக,
24 ம் சடத்தத்துவங்கள், இதில் சீவன் குடிபுக,
தத்துவங்கள் 25 ஆம். இந்தச்சீவனுள் இறைவன் புகுந்து, யாவற்றையும் இயக்கி அருள் புரிகிறான்.
சைவ சித்தாந்தத் தாக்கமும் தெரிகின்றதே ஐயா.
பதிலளிநீக்கு