ஞாயிறு, 22 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :944


திருக்குறள் -சிறப்புரை :944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.--- ௯௪௪
 முன் உண்ட உணவு செரித்தது அறிந்து, வயிற்றுக்கு ஒவ்வாதவற்றை ஒருபொழுதும் உண்ணக்கூடாது என்ற உறுதியுடன், நன்றாகப் பசி எடுத்தபின் உணவைச் சுவைத்து உண்க.
“பசி ருசி அறியாது”- பழமொழியை நினைவில் கொள்க.
 “அருக்குக யார் மாட்டும் உண்டி சுருக்குக
செல்லா இடத்துச் சினம். –நான்மணிக்கடிகை.
அடுத்தவர் வீட்டில் உண்ணுதலைக் குறைத்துக் கொள்க; செல்லத் தகுதி இல்லாவிடத்துச் சினத்தைத் தணித்துக்கொள்க


1 கருத்து:

  1. தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா. மிகவும் பயனுள்ள கருத்துகளைக் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு