மெய்ப்பொருள் காண்பது அறிவு -17
“உடம்பார்
அழியின் உயிரார் அழிவர்
திடம்பட
மெய்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை
வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை
வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” –திருமந்திரம்.
“ஒன்றாகக்
காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றாந்தன்
வீரமே வீரம் – என்றானும்
சாவமற்
கற்பதே கல்வி தனைப்பிறர்
ஏவாமல்
உண்பதே ஊண்.” –ஒளவையார்.
ஒன்றே இறை – சிவன்
ஐம்புலன் அடக்கல் – திண்மை
சாவாமற் கற்பது – சாகாக் கல்வி
ஏவாமல் உண்பது – தன் உழைப்பால் உண்ணும்
உணவு.
சாகாக் கலை – மரணமிலாப் பெருவாழ்வு
; வள்ளலார், தாயுமானவர் வழிநின்று அறிக.
“நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.” –ஒளவை குறள்.
யோக நெறியில் செம்பொருளைச் சிந்தித்துணரும்
பயிற்சியினால் இறவாப் பெருநிலையை அடைவதே சாகாக் கல்வியாகும்.
சாதலால் வரும் துன்பத்தினை மனவுணர்வு படைத்த மாந்தர்கள்
தாம் மேற்கொண்டு செய்யும் தவத்தின் ஆற்றலால் மாற்றி, இவ்வுலகில் இறவா நிலையை அடைதல்
கூடும் என்னும் உண்மையினைத் திருவள்ளுவர்,
“
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
(269) என்று கூறுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக