மெய்ப்பொருள் காண்பது அறிவு -23
மூச்சுப் பயிற்சி
”
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன்
இடம்வலம் தன்வழி நூறே.” –திருமந்திரம்.
உயிர்த்தலைவன்
பிராணன் (உயிர்வளி) இடமாகவும் வலமாகவும் சென்றுவரச் செய்பவர்கள், பிராணனை இடப்பக்கம்
வலப்பக்கமாக உள்ளிழுத்து, நிறுத்தி வெளியிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்பவர்கள் அதிகம்
பேர் இல்லை. காற்றை இடமாக இழுத்து, வலமாக விடப் பழகிக் கொண்டால் சக்தி, ஞானஒளி வெளிப்படும்.
இடம் வலமாகப் பிராணாயாமப் பயிற்சி செய்பவருக்கு, ஐம்புலன்களும் தம் இச்சைக்கு ஒடுங்கித்
தன் இயல்பு அடங்கியிருக்கும். இப்படிப் பிராணாயாமப் பயிற்சி செய்வோர்தம் வாழ்நாள் நூறு
ஆகும். (இர. வாசுதேவன்.)
மூச்சுப்பயிற்சியின் பலனைப் படிக்கும்போது வியப்பாக உள்ளது.
பதிலளிநீக்கு