திருக்குறள் -சிறப்புரை :935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.--- ௯௩௫
சூதாடுவதில் வெறிகொண்டு, ஆடும் களம் புகுந்து, தன் தொழில் திறமையை விடாது
பற்றி நின்று, எல்லாவற்றையும் இழந்தவர்கள்
பலர் உளர்.
“ஐய நீ ஆடுதற்கு அமைந்த சூது
மற்று
எய்து நல்குரவினுக்கு இயைந்த
தூது வெம்
பொய்யினுக்கு அருந்துணை
புன்மைக்கு ஈன்ற தாய்
மெய்யினுக்கு உறுபகை என்பர்
மேலையோர்.” –நைடதம்.
அரசனே..! சூதானது வறுமைக்குத் தூதும் பொய்க்கு உதவியும் இழிதொழிலுக்குத் தாயும் வாய்மைக்குப் பகையும் ஆகும் என்பர் பெரியோர்கள்.
நன்று.
பதிலளிநீக்கு