திருக்குறள் -சிறப்புரை :940
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.--- ௯௪0
நோயால் உடல் நலியுந்தொறும் இன்னும் கொஞ்சகாலம் வாழவேண்டும் என்ற எண்ணம்கொண்ட
உயிருக்கு, உடல் மீதுள்ள ஆசை அதிகரிப்பதைப்போல, சூதாட்டத்தில் பொருளை இழக்குந்தொறும்
எப்படியும் வென்றுவிடலாம் என்ற ஆசை அதிகரிக்கும்.
“அனைத்தையுந் தோற்றனை அருவிபாய் கவுள்
சினக் களி மால் களிறனைய
சீற்றத்தோய்
மனத்திடை நினைக்குவது என்னை
வல்லைநின்
புனக்கொடிக்கு இயைந்து இனிப் பொருதும் யாம் என்றான்.---நைடதம்.
நளனே…! அனைத்தையும் சூதாடித்
தோற்றுவிட்டாய், மலையருவியானது பாயும் கபோசலத்தை
உடையவனே, சினம் கொண்ட பெருமை பொருந்திய யானையை
ஒத்த தோற்றத்தினை உடையோய், இனியும் நீ மனத்தில்
நினைக்குவது என்னை ? விரைந்து வா ..உன் மனையாளைப் பணையமாக வைத்து சூதாடுக என்றான் புட்கரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக