திருக்குறள் -சிறப்புரை :946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.---- ௯௪௬
(இழிவு அறிந்து ; கழிபேர் இரையான்.)
அளவுக்கு மிகாமல் உண்பவனிடத்து உடல் நலமாகிய
இன்பம் நிலைத்து இருப்பதைப்போல அளவு கடந்து உண்பவனிடத்து உடலை வருத்தும் நோய் நிலைத்து
நிற்கும்.
“விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட
புல்லறிவாளர் வயிறு.” –நாலடியார்.
அறிவு கெட்டவர்களின் வயிறு, விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும் சுடுகாடாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக