சனி, 28 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -35

மெய்ப்பொருள் காண்பது அறிவு -35
” எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்.” –மணிமேகலை.
எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டல் வேண்டும்.
“ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்  தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவருளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தேர்ந்தேன்…” –அருட்பிரகாச வள்ளலார்.
“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
 தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே.” –தாயுமானவர்.
“ சீவகாருண்ய ஒழுக்கத்தினால் மக்கள் உள்ளத்துள் தோன்றும் இரக்கத்தின் விளக்கமே கடவுள் விளக்கம். அவ்வொழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம். இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் கண்டு, நுகர்ந்து நிறைவு பெற்றவர்களே சீவன் முத்தர்கள் ஆவர்; அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள். உயிர்களுக்கு உயிர்களின் தொடர்பாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக்கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தலே சீவகாருண்ய ஒழுக்கம் எனப்படும்.
 “ அனபே சிவம் “ என்பார், திருமூலர்.

1 கருத்து:

  1. சிலர் சீவன்முத்தர்கள் என்கிறார்கள். சிலர் சீவன்முக்தர்கள் என்கிறார்கள். உங்களது இப்பதிவில் சீவன்முத்தர்கள் என்று பயன்படுத்தியுள்ளீர்கள். இரண்டிற்கும் வேறுபாடு உண்டா ஐயா?

    பதிலளிநீக்கு