திருக்குறள்
-சிறப்புரை
:1181
119. பசப்புறு பருவரல்
நயந்தவர்க்கு
நல்காமை
நேர்ந்தேன்
பசந்தஎன்
பண்பியார்க்கு
உரைக்கோ
பிற.------ ௧௧௮௧
என் இனிய காதலர்விரும்ப, அன்று பிரிவுக்கு
உடன்பட்டேன் ; இன்று அப்பிரிவுத்
துன்பம் தாங்குதற்கு
அரிதாகி, என் மேனியெங்கும்
பசலை படர, இந்நிலைய
ஈண்டு யாருக்குச்
சொல்ல வல்லேன்,,?
“ கைவளை நெகிழ்தலும் மெய் பசப்பூர்தலும்
மைபடு
சிலம்பின்
ஐவனம்
வித்தி
அருவியின்
விளைக்கும்
நாடனொடு
மருவேன்
தோழி
அது
காமமோ
பெரிதே.” குறுந்தொகை.
தோழி..! ஆற்றாமையால்
கை வளையல்கள் தானே நெகிழ்ந்து வீழவும் உடம்பின்கண் பசலை, தாமே பரவுதலாலும் மேகங்கள் சூழ்ந்த மலைப்பக்கத்தில் மலை நெல்லை விதைத்து, மலையருவியின்
நீரினால்
விளைவிக்கின்ற
நாட்டின்
தலைவனொடு
யான் பொருந்தேன்..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக