வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1195


திருக்குறள் -சிறப்புரை :1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.---- கக௯௫

நாம் காதல்கொண்ட தலைவர், நம்மீது அவ்வளவாகிய காதல் கொண்டு ஒழுகாதுபோனால், அவர் நமக்கு என்ன இன்பத்தைச் செய்துவிட முடியும்.

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.” ---குறுந்தொகை.

தோழி..!தொடர்பிலார் மாட்டுத் தோன்றும் அருளையும் தொடர்புடையார் மாட்டுத் தோன்றும் அன்பையும் துறந்து, பொருள் தேடும் நோக்கம் ஒன்றே  உடையராக நம்மைப் பிரிந்து செல்லும் காதலர், அறிவுடையவராயின் அத்தகைய ஆற்றலையுடைய அவர் அறிவுடையவரே ஆகுக. அவரை பிரிந்திருப்பதற்கு உரிய ஆற்றல் இல்லாத நாம் அறிவு இல்லேம் ஆகுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக