ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1185


திருக்குறள் -சிறப்புரை :1185

  உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. ----- ௧௧௮

அங்கே எம் காதலர் பிரிந்து செல்வாராக ; இங்கே என் மேனி பசப்பூர்வதைக் காண்பாயக ;இஃது எத்தன்மைத்தோ அறியேன்,

தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையோடு
வெண் பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால்
தன் சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போல் செய்யும் ஊர் கிழவோனே.” ===ஐங்குறுநூறு.

தான் ஈன்றெடுத்த பார்ப்பினைத் தானே உண்டு பசி தீர்க்கும் அன்பில்லாத முதலையையும், வெண்ணிறப் பூக்களைக் கொண்ட பொய்கைகளையும் கொண்டது தலைவனுடைய ஊர் என்பர். அதனால், அவ்வூரின் தலைவனும் தன் சொல்லை உண்மை என்று தெளிந்திருப்போர் மேனியில் தன் பிரிவினால் பொன்னிறம் கொண்ட பசலையூரச் செய்வானாயினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக