செவ்வாய், 16 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1203


திருக்குறள் -சிறப்புரை :1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். -----0

 தும்மல் வருவதுபோல் தோன்றி அடங்கிவிடுகின்றது. ஒருவேளை, தலைவர் நம்மை நினைப்பதுபோலிருந்து நினைக்காமல் இருந்து விடுகின்றாரோ..?

எனை விருப்புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி நீடாது
எவன் செய்தனள் இப்பேரஞர் உறுவி என்று
ஒருநாள் கூறின்றுமிலரே…”-------நற்றிணை.

தோழி..! என்மேல் மிகுந்த விருபுற்று விளங்கிய தலைவர், இப்போது சிறிதும் எம்மை நினையாது வாழ்கின்றார். அப்படி அவர் வாழ்கின்ற நிலையிலும் அவருக்கு இசைந்த உள்ளமும் நெகிழ்ந்த தோளும் வாடிய மேனி நிறமும் எனக்குத் துன்பத்தைச் செய்வனவாயின. இந்நிலையில் இப்பெரும் துன்புற்றவள் ஏன்ன செய்கின்றனள் என்று ஒரு நாளும் கூறினார் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக