திருக்குறள்
-சிறப்புரை
:1219
நனவினான்
நல்காரை
நோவர்
கனவினான்
காதலர்க்
காணா
தவர்.---- க௨க௯
கனவிலே காதலரைக் கண்டறியாத மகளிர் , நனவில் நம் காதலர் அன்பு செய்யவில்லையே என்று
வருந்துவர்.
”அஞ்சல் என்று அகன்று நீ அருளாது
துறத்தலின்
நெஞ்சு அழி துயரட நிறுப்பவும் இயையும்மன்
நனவினால் நலம்வாட நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்றுக் கங்குலும் அரற்றாக்கால்” ---கலித்தொகை.
நனவிலே அழகுகெடும்படி வந்து, நலிவைத்தந்து, நடுங்குதற்குக்
காரணமான வருத்தம், கனவினால் சற்றே மறைந்தாலும் இரவெல்லாம் இவளை
வருத்தமுறச் செய்தது ; இவள் ஆற்றாளாயினள் ; இயற்கைப் புணர்ச்சிக்கண் அஞ்சல் என்று கூறினை, பின்னர்
அகன்று, அன்புசெய்யாது துறந்தனை ;அதனால்
நெஞ்சழிந்து துயர்மிக வருந்தினள் ; இறந்துபடாது உயிரைப் போக்காமல்
நிறுத்துதலும் பொருந்தும் ; அதனாற் பெற்றதென்.? அக்கனவின் ஆற்றல் அதற்கு இயைகின்றது இல்லையே…!
அருமை
பதிலளிநீக்கு