திருக்குறள்
-சிறப்புரை
:1193
வீழுநர்
வீழப்
படுவார்க்கு
அமையுமே
வாழுநம்
என்னும்
செருக்கு.------ கக௯௩
தம்மால் விரும்பப்படும் அளவிற்கு மேலும் மகளிரால்
காதலிக்கப்படும் தலைவர், பிரிந்து சென்றாராயினும் அவர் நம்மை
நாடிவருவர், அவருடன் இனிப் பிரிவறியாது வாழ்வோம் என்னும் உறுதிப்பாடு, மனத்துள் அமையும்.
“இனைநலம் உடைய கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன
நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே.”----கலித்தொகை.
தலைவன் மாட்டு அருள் தோன்றுதற்குக் காரணமான, நன்மைகளை
உடைய காட்டிடைச் சென்றவர், நமது புனைந்த அழகைக் கெடுப்பவர் அல்லர்,
காண்பாயாக ; நம் மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே ஒலித்து அவர் வரவைக் கூறவும்
; நல்ல அழகையுடைய மையுண்ட இடதுகண்ணும்
துடித்தது, தலைவன் விரைந்துவருவான் என்றாள் தலைவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக