திருக்குறள்
-சிறப்புரை
:1214
கனவினான்
உண்டாகும்
காமம்
நனவினான்
நல்காரை
நாடித்
தரற்கு. ------ க௨க௪
நனவின்கண் வந்து அன்புசெய்யாது அகன்ற காதலரை
என் கண்முன்னே கனவு கொண்டுவந்து காட்டுதலால்,
அக்கனவு இன்பம் அளிக்கிறது.
””கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய்
போல
புதுவது கவினினை என்றியாயின்
நனவின் வாரா நயனிலாளனைக்
கனவில் கண்டு யான் செய்த்து கேள் இனி.”----கலித்தொகை.
தோழி…!
கானலுக்கு உரியவனான் சேர்ப்பனைக் கண்டு கூடினாய்ப் போலப் புதிதாக ஓர்
அழகினை உடையாளாக யான் இருப்பதாகக் கேட்டனை ; நனவிலே வந்து அருள்
செய்யாத நல்ல தன்மை இல்லாதவனைக் கனவில் கண்டேன் ; கண்டு யான் செய்தவற்றை இனிக் கேட்பாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக