வெள்ளி, 12 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1194


திருக்குறள் -சிறப்புரை :1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.----- கக௯௪

 தாம் விரும்பும் காதாலர் தம்மை விரும்பவில்லை என்றால் கற்பிற் சிறந்த மகளிரால் மதிக்கப்படுவாரும்  நல்வினையற்றவர் என்றே கருதப்படுவர்.

 துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி
ஆருயிர் அழிவதாயினும் நேரிழை
கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த்
தண்ணம் துறைவன் நாண
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.” ---நற்றிணை.

தோழி..! பரந்து பெருகிய நீரைக்கொண்டு குளிர்ந்திருக்கும் துறைக்குத் தலைவன் நாணம் அடையுமாறு நமக்குப் பகைவர் ஆயினார் தூற்றும் பழிச்சொல் நிரம்ப உண்டாயிற்று. நம்மைத் துறந்துசென்ற தலைவர் முன்பு நம்மோடு தங்கியிருந்த இடத்து , நாம் பிரிவுக்காக மிக வருந்தி, நம் அரிய உயிர் நம்மைவிட்டு நீங்கிப் போவதாயினும் அத்துன்பம் புறத்தார்க்குப் புலனாகாதவாறு நாம் மறைத்துக்கொள்ள வேண்டும். எனவேதான் நான் வருந்தாது ஆற்றியிருக்கிறேன்நீயும் வருந்தாதே.

1 கருத்து: