ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1198


திருக்குறள் -சிறப்புரை :1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். ---- கக௯௮

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைக் கேட்கப்பெறாது, பிரிவுத் துயராற்றி உயிர் வாழும் பெண்டிரைப் போல , உறுதியான உள்ளம் படைதோர் உலகில் எவரும் இலர்.

இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்
நன்னுதல் பசலை நீங்க அன்ன
நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.” ---குறுந்தொகை.

  எம் தலைவி விரும்புகின்ற பண்புடைய தலைவ,,!நின்னைக் காணாத்போது  பெரிதும் துன்புற்று வருந்தும், நல்ல நுதலையுடையவளது பசலை நீங்கும்படி,  இவளுக்கு விருப்பமாகும் (மணந்து கொள்வேன்) ஒரு சொல்லைத் தலைவியிடம்  சொல்ல உமக்கு  இயலாதா..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக