திருக்குறள்
-சிறப்புரை
:1218
துஞ்சுங்கால்
தோள்மேல
ராகி
விழிக்குங்கால்
நெஞ்சத்தர்
ஆவர்
விரைந்து. ----- க௨க௮
என் நெஞ்சில் நிறைந்துள்ள காதலர், யான் தூங்கும்போது தோள்சாய்ந்து கிடப்பாராகிக்
கண் விழித்துப் பார்க்கும்போது விரைந்து சென்று நெஞ்சில் மறைந்துவிடுவார்.
“ஓஒ கடலே தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற
இமையெடுத்து
பற்றுவேன் என்று யான் விழிக்குங்கால் மற்றும் என்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய்
செய்யும்அறனில்லவன்.” ---கலித்தொகை.
கடலே…!
அறனில்லாதவன், தெளிவாக என்கண்ணுள்ளே வந்து தோன்றுதலினாலே,
இமையை விழித்து அவனைப் பிடித்துக் கொள்வேன் என்று கருதி, யான் விழிக்குங்காலை பின்னும் ஓடிப்போய் என் நெஞ்சத்துள்ளே மறைந்து நின்று,
அப்பொழுதே யான் துயிலாதவாறு காமநோயைத் தந்து நிற்பான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக