திருக்குறள்
-சிறப்புரை
:1222
புன்கண்ணை வாழி மருள்மாலை என்கேள்போல்
வன்கண்ண
தோநின்
துணை. ----- க ௨௨௨
மயங்கிய மாலைப் பொழுதே வாழி..! நீயும்
என்னைப்போல் ஒளி இழந்து தோன்றுகின்றாயே ;
உன் துணைவரும் என்னை மணந்து பிரிந்து சென்ற என் கணவரைப்போல இரக்கமற்றவரோ..?
“ மாலை நீ ஈரமில் காதலர் இகந்து அருளா இடம்
நோக்கிப்
போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்
ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ..!” -----கலித்தொகை.
மாலைப் பொழுதே…! நீ, அன்பு இல்லாத காதலர் விட்டு நீங்கி,
அருள் செய்யாத காலம் பார்த்துப் போரிலே தோல்வி உற்றாரைப் பார்த்து,
அவர்பட்ட தோல்வியை இகழந்து சிரிப்பாரைப் போலப் பொறுத்தற்கரிய வருத்தமுற்ற
என்னை, வருத்துதற்கு வந்தனையோ..? நீ,
கொடிய மாலைப் பொழுதாக இருந்தனையே..!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக