வெள்ளி, 19 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1208


திருக்குறள் -சிறப்புரை :1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. ----0

என் காதலரை எத்துணையும் இடையறாது  நினைத்தாலும் அவர் கடிந்து கொள்ளார் ; என் காதலர் எனக்குச் செய்யும் அன்பு அவ்வளவன்றோ..!

ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும்
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ உயர் மணற் சேர்ப்ப
………….  …………  ………….  ………..
நறவுமகிழ் இருக்கை நல்தேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு அன்ன என்
நல்தோள் நெகிழ மறத்தல் நுமக்கே.”----நற்றிணை.

தலைவ..! நல்ல தேரை உடைய பெரியன் என்பானுடைய கள் மணம் கமழும் பொறையாறு போன்ற சிறந்தமைந்த எம் தோள்நலன் பொலிவழிய நீ எம்மை மறப்பது அரிது ;  நீ என்னை மறப்பதற்கு  நீ இல்லாத விளையாட்டையோ, தங்கும் சோலையையோ, நின்னை நினையாது வருந்தும் நெஞ்சினையோ, உம்முடன் ஊடுதலையோ கொண்டிருக்கவில்லை. அவ்வாறமையின் நீ எம்மை மறந்திருக்கக்கூடும், அஃதில்லையே…! ஆதலின் நீ மறவாமையால் நும் உள்ளத்தில் உறைவதாயினோம். அதனால் இவள் தோள் நெகிழவில்லை, அதற்குக் காரணம் நீயே யன்றி யான் ஆற்றியமையே எனவுரைத்தல் மிகைதானே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக