புதன், 10 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1191


திருக்குறள் -சிறப்புரை :1191
120. தனிப்படர் மிகுதி

 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி,----- கக௯க

தம்மால் காதலிக்கப்படும் கணவர், தம்மைக் காதலிக்கப் பெற்ற மகளிர் ;பெற்றாரன்றே காமநுகர்ச்சி என்னும் விதையில்லாத கனியை.

ஆராக் காமம் ஆர்பொழிற் பாயல்
வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி
முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்
அடியோர் மைந்தர் அகலத்து அகலா
அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி
புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும்.” ----பரிபாடல்.

நுகர்ந்தது போதும் என்று எண்ணி அமையாத காம இன்பத்தினை, மலைச் சாரலில் நிறைந்த சோலைகளில் உள்ள பூம்படுக்கைகளில், தலைவரோடு கூட்டிவைத்த களவுப் புணர்ச்சியினையும் திருமணம் செய்துகொண்டு தம் கணவரோடு வாழும் மகளிர், தம் கணவர் மார்பகத்தினைப் பிரியாமல் மலர்களில் திரியும் மகன்றில் (நீர்ப் பறவை) பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற முதிராக் காதலோடு முடிவு பெறாத இன்ப நுகர்ச்சியினையும் மறவாமல் எப்போதும் காதலர்களுக்கு வழங்கும் சிறப்புடைத்து, திருப்பரங்குன்றம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக