திருக்குறள்
-சிறப்புரை
:1189
பசக்கமன்
பட்டாங்கென்
மேனி
நயப்பித்தார்
நன்னிலையர்
ஆவர்
எனின்.---- ௧௧௮௯
தலைவர் பிரிந்து செல்வதற்கு யான் உடன்படுமாறு சொல்லியவர், இன்று நன்னிலை எய்தினாராயின், என் மேனி, பசலை படர்ந்து கிடப்பதாக.
“ஓங்கல் வெற்பின் சுரம்பல இறந்தோர்
தாம்பழி உடையர் அல்லர் நாளும்
நயந்தோர் பிணித்தல் தேற்றா வயங்குவினை
வாளேர் எல்வளை நெகிழ்த்த
தோளே தோழி தவறுடை யவ்வே.”------அகநானூறு.
ஓங்கி உயர்ந்த மலைகளை அடுத்த கடியவழிகளைக் கடந்து
சென்றுள்ள நம் தலைவர், பழியாய தவறுகளைச் செய்தவர் அல்லர்.
நாள்தோறும் நம்மை மறவாது பெரிதும் விரும்பிவந்த காதலரை, நம்மைவிட்டுப் பிரியாது பிணித்துக்கொள்ளுதலை அறியாத, நன்கு வடிக்கப்பட்ட வாளால் அறுத்து அழகாகச் செய்யப்பெற்ற ஒளி பொருந்திய வளையல்களை
நெகிழவிட்ட எம் தோள்களே தவறுடையன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக