திருக்குறள்
-சிறப்புரை
:1182
அவர்தந்தார்
என்னும்
தகையால்
இவர்தந்தென்
மேனிமேல்
ஊரும்
பசப்பு. --- ௧௧௮௨
அவர்(காதலர்) தந்தார் என்னும் பெருமிதத்தால் பசலையானது மேன்மேலும் ஊர்ந்து உடல்
முழுதும் பரவுகின்றது.
“வெண்குருகு நரலும் தண்கமழ் கானல்
பூமலி பொதும்பர் நாள்மலர் மயக்கி
விலங்குதிரை உடைதரும் துறைவனொடு
இலங்குஎயிறு தோன்ற நக்கதன் பயனே.” ---குறுந்தொகை.
அவனுடன் தலைவி, தன்னுடைய விளங்கிய பற்கள் வெளிப்படச் சிரித்து விளையாடினமையால்
உண்டாகிய பயன், தோளின் பழைய இயற்கை அழகு அழிய, செயற்கை அழகும் தேய்ந்து, துன்பத்தை உடைய உள்ளத்தோடு,
இரவினும் கண்கள் துயிலாமல், உடம்பு பசலையாகி வேறுபட்டு
உயிர் நீங்குவதுதானோ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக