திருக்குறள்
-சிறப்புரை
:1202
எனைத்தொன்று
இனிதேகாண்
காமம்தாம்
வீழ்வார்
நினைப்ப
வருவதொன்று
இல்.----- க௨0௨
தலைவரைப் பிரிந்து வாழும் காலத்து, அவரைப்பற்றி நினைப்பதால் எவ்வகையான துன்பமும்
இல்லையாகின்றது. அதனால், எவ்வகையானும் காமம்
இனிமையுடையதே.
“ ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
உள்ளின் உள்நோய் மல்கும்
புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்.’ ----குறுந்தொகை.
அன்னையானவளே..! மலைகள் உயர்ந்து விளங்கும்
நாட்டின் தலைவனுடைய, பூசிய சந்தனம் புலர்வதற்கு இடனாகிய மார்பினைப்
பிரிந்து, யான் நினைத்த அளவிலேயே உள்ளத்தின்கண் காமநோய் பெருகிற்று;
அங்ஙனம் நினையாது, தழுவினால் நோய் பெருகுவதற்கு
மாறாக நீங்குவதன் காரணம் யாது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக