புதன், 17 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1204


திருக்குறள் -சிறப்புரை :1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.-----0

எம் காதலர் எம்முடைய நெஞ்சகத்து  எப்போதும் நிறைந்துள்ளார் ; அதைப்போல் நாமும் அவருடைய நெஞ்சில் நீங்காது இருப்போமா..?

பெய்தகுன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசை தாஅய் வீசும்வளி கலந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவாம் நாமே
காலமாரி மாலை மாமலை
இன்னிசை உருமினம் முரலும்
முன்வரல் ஏமம் செய்து அகன்றோரே.” -----குறுந்தொகை.

தோழி..!கார்ப்பருவத்தில் முழவோசையுடன் மேகங்கள் முழங்கப் பெருமழை பெய்த குன்றத்தின்கண், மலர்மணம் கமழும்  வெள்ளநீர் மலர்களைச் சுமந்து  வந்து அருவி நீர் வீழும் , கார்ப்பருவத்திற்கு முன்னரே வருவதாகப் பாதுகாப்பான மொழிகளைக் கூறிச் சென்றவர், இன்னும் வாராராயினர்; அவர் உறுதியாக நம்மை மறந்தவராதல் வேண்டும் , ஆனால் நாம் அவரை மறக்கமாட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக