ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1199


திருக்குறள் -சிறப்புரை :1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.---- கக௯௯

என் அன்பிற்கினிய காதலர் என்னிடத்து அன்பிலராயினும் அவரைப்பற்றி ஏதேனும் ஒருசொல்லும் என் செவிக்கு இனிமை பயக்கும்.

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக
 பெரும் பெயர் உலகம் பெரீஇயரே அன்னை
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும் என்றோளே.” ----குறுந்தொகை.

தலைவன், தன்னுடைய வீட்டிலிருந்து தன்னுடைய முயற்சியால் தேடிய பொருலில், தனக்குரிய ஒரு பகுதியை உண்டாற் போன்ற இன்பம் உடைய,  இனிய பழங்கள் தொங்கும் பலா மரங்களை உடைய, உயர்ந்த மலைநாட்டின் தலைவன் ஆவான். அத்தலைவன் வரைதற்கு உரியவனாய்(வரும்) வருவான் என அன்னை மொழிந்தனள், அவள் பெறுதற்கு அரிய அமிழ்தமே உண்ணும் உணவாக,  பெரும் புகழுடைய துறக்க உலகத்தையே பெறுவாளாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக