திங்கள், 22 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1213


திருக்குறள் -சிறப்புரை :1213

நனவினான் நல்கா தவரைக் கனவினான்
காண்டலின் உண்டென் உயிர். ------௨க௩

நனவில் வந்து அன்பு பாராட்டாத காதலர்,  என் கனவில் தோன்றி மகிழ்விப்பதால், நான் இன்னும் உயிரோடு இருக்கின்றேன்.

கனவினால் கண்டேன் தோழி காந்தக்க்
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவில் வருதலும் உண்டு என
அனைவரை நின்றது என் அரும் பெறல் உயிர். “---கலித்தொகை

தோழி…!  கனவு கண்டேன் ; யான் காணும்படி கனவிலே வந்த கானலுடைய அழகிய தலைவன் நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதினேன். அவன் அன்பு செய்யும் அளவே என் பெறுதற்கரிய உயிரும் நீங்காது எதிர்பார்த்து நின்றது காண், என்றாள் தலைவி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக