செவ்வாய், 23 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1216


திருக்குறள் -சிறப்புரை :1216

நனவென ஒன்றில்லை யாயின் கனவினான்
காதலர் நீங்கலர் மன். ----௨க௬

நனவு என ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில்வந்து மகிழ்விக்கும் காதலர் எம்மைவிட்டு எப்போதும் நீங்காது இருப்பார்.

சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து
தாம் வேண்டு  உருவின் அணங்குமார் வருமே
நனவின் வாயே போல துஞ்சுநர்க்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே…” ---அகநானூறு.

தெய்வங்கள் உறையும் பக்கமலையினை அடுத்த நம் தோட்டத்தில், அணங்கானது ஒளிபொருந்திய மலர்களைச் சூடிக்கொண்டு, தான் விரும்பிய உருவத்தை எடுத்துக்கொண்டு வருவது உண்டு; அன்றியும் நனவில் தோன்றும் உண்மை நிகழ்வுகள் போன்று, கனவிலும் நிகழ்வுகள் உண்மையெனத் தோற்றி மயக்கவும் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக