திருக்குறள்
-சிறப்புரை
:1215
நனவினான்
கண்டதூஉம்
ஆங்கே
கனவும்தான்
கண்ட
பொழுதே
இனிது. ----- க௨க௫
காதலரை நேரில்கண்டு மகிழ்ந்து துய்த்த இன்பமும்
அப்பொழுது இனிமையாயிருந்தது. இப்பொழுது அவரைக் கனவில் கண்டு மகிழும்
இன்பமும் வேறுபாடின்றி ஒத்துள்ளனவே…!
”கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல்
நீவி
நாறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்று ஏக்கற்ற உலமரல்
போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே.” –அகநானூறு.
நினது பக்கம் உயர்ந்த புருவத்தினையும் திரண்டு சிறந்த
நெற்றியினையும் துடைத்தேன் ; மணம் பொருந்திய கூந்தலைக் கோதினேன்
; அந்த நல்ல நேரத்தில் விழித்தெழுந்தேன்; உன்னைத்
தழுவுதல் போன்ற , என்கையை வெறுங்கையாக்கிய பொய்யான அக்கனவை எண்ணி
வருந்திய மனச் சுழற்சியை நீ புரிந்துகொள்ள வில்லை; ஆதலால் எம்மைப்
புலக்கின்றாய்…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக