செவ்வாய், 9 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1188


திருக்குறள் -சிறப்புரை :1188

பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்.----- ௧௧௮௮

பிரிவாற்றாது  இவள் மேனி பசப்புற்றது என்று என்னைத் தூற்றுவாரல்லது, இவளை அவர் நீங்கிச்சென்றார் என்று கூறுவார் யாருமில்லை.

யாவதும் அறிகிலர் கழறுவோரே
தாயில் முட்டை போல உட்கிடந்து
சாயின் அல்லது பிறிதுஎவன் உடைத்தே
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம் காதலர் கையற விடினே. ----குறுந்தொகை.

தன்னை நினையும் தாய் யாமையைப் பார்த்து வளரும் பார்ப்பினைப் போல, தம்மை நினையும் தலைவரைப் பலகால் கண்டலால் காமம் வளரும் தன்மையுடையது. நம்மிடத்துக் காதலை யுடைய தலைவர், நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து வரையாது ஒழுகுவாராயின், தாயில்லாத முட்டையுள், பார்ப்பின் கரு அசையாது கிடந்து அழிவதுபோல உட்கிடந்து மெலியினன்றி, வேறு என்ன பயன் உடையதாம்..? ஆதலின், என்னை இடித்துரைப்பார் ஏதும் அறியாதவர்.


களப்பாள் குமரனின்.
ஓட்டுக்குப் பணம் …?”
குறும்படம் காணுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக