திங்கள், 8 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1187


திருக்குறள் -சிறப்புரை :1187

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. ----- ௧௧௮

என் காதலரைத் தழுவி மயங்கிக் கிடந்தேன், என்னை அறியாது சிறிது விலகியபொழுது அவ்வளவில் பசலை என்னை அள்ளிக் கொள்வது போலப் பற்றிப் பரவியது.

இடைகொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளியோடற்பாள் மன்னோ
படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள்.”—கலித்தொகை.

நீ, உறங்குவதற்கு அழகுடையதாக அமைக்கப்பட்ட படுக்கையில் துயிலுங்கால், தூக்கம் காரணமாக அறியாது புடைபெயர்ந்து முயக்கத்தைக் கைவிட்டு நீங்கினை யாயினும் தனிமை கொண்டு வருந்துவாள் ; கூட்டத்திற்கு இடையறவு  செய்துகொண்டு வேற்று நாட்டிடத்தே நிலையில்லாப் பொருளைத் தேடிப் போகுவை என்று யான் கூறக்கேட்டால் நெஞ்சழிந்து, ஒளி கெட்டுப்போக , உயிர் வாழ்வாள் என்றோ நினைக்கின்றாய்..? அவள் இறந்துபடுவாளே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக