திருக்குறள்
-சிறப்புரை
:1225
காலைக்குச்
செய்தநன்று
என்கொல்
எவன்கொல்யான்
மாலைக்குச்
செய்த
பகை. ----- க ௨௨௫
எதிர்நோக்கும் ஆவலைத்தூண்டும் காலைப் பொழுதிற்கு
நான் செய்த நன்மைதான் என்ன ; காதலர்வரவைக் காணாது ஏமாற்றம் அளிக்கும் மாலைப் பொழுதிற்கு நான் செய்த தீமைதான்
என்ன..?
”எல்லை கழிய முல்லை மலர
கதிர் சினம் தணிந்த கையறு மாலை
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்
எவன் கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.” ----குறுந்தொகை
பகற்பொழுது கழிந்தது, முல்லை அரும்புகள் மலர்ந்தன ; ஞாயிறும் தம் வெம்மை தணிதற்குக் காரணமான மயக்கத்தைத் தோற்றுவிக்கும் மாலைப்பொழுதும்
வந்தது. மாலைப் பொழுது, இரவினை எல்லையாகக்
கொண்டு சிறிது பொழுது
நிற்பதால், அக்காலத்தில் ஒருவாறு ஆற்றியிருத்தலும்
கூடும் ஆனால் அம்மாலைப் பொழுதோ, கடலைவிடப் பெரிய எல்லையற்ற கங்குல்
வெள்ளத்தை உடையதால், அதனை எவ்வாறு யான் நீந்துதல் கூடும்,
மாலைப்பொழுது இரவினும் கொடியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக